இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரான விராட் கோஹ்லியால் ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையே கேப்டவுனில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 72 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இப்போட்டியின் போது இந்திய அணி தலைவரான விராட் கோஹ்லி முதல் இன்னிங்ஸில் 5 ஓட்டங்களில் வெளியேறி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.
இந்நிலையில் மத்தியபிரதேசத்தின் Ratlam பகுதியில் உள்ள 63 வயது முதியவரான Babulal Bairwa, தன் உடலில் பெட்ரோலை ஊற்றி தற்கொலை முயற்சிக்கு செய்தார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது மனைவி உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தாகவும், அவருக்கு சிறிய அளவிலான தீக்காயங்கள் இருப்பதாகவும், குறிப்பாக முகம் மற்றும் தலைகளிலில் காயங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தற்கொலைக்கு முயற்சி செய்தவரின் பெயர் Babulal Bairwa எனவும், இவர் விராட் கோஹ்லியின் தீவிர ரசிகர் எனவும், விராட் கோஹ்லி சிறப்பாக விளையாடாத காரணத்தினாலும், இந்திய அணியின் மோசமான ஆட்டத்தினாலும் விரக்தியடைந்து தற்கொலைக்கு முயன்றதாகவும் செய்திகள் வெளியாகின.
இதையடுத்து தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக பொலிசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், அவர் மது அருந்திவிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது, ஆனால் அவர் மது அருந்தவில்லை என்பது தெரியவந்துள்ளது.
அதுமட்டுமின்றி அவர் கோஹ்லி அவுட்டாகியவுடனே தற்கொலைக்கு முயன்றுள்ளார், இதனால் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2007-ஆம் ஆண்டு நடந்த உலகக் கிண்ணம் தொடரின் போது, இந்திய ரசிகர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.