ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தில் இடம்பெறவுள்ள இருபதுக்கு 20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருடன் தான் ஓய்வுபெறவுள்ளதாக இந்திய அணியின் தலைவர் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
ஒக்டோபர் 17 முதல் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் மற்றும் ஓமானில் இடம்பெறவுள்ள ஐ.சி.சி இருபதுக்கு 20 உலகக் கோப்பை முடிந்த பின்னர், டி 20 களின் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் பதவியில் இருந்து தான் விலகுவதாக விராட் கோலி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்தார்.
இந்நிலையில் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி முதல் இடம்பெறவுள்ன டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் அவர் தொடர்ந்து தனது அணியை வழிநடத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
அணியின் தலைவராக அணிக்காக தாம் உச்சபட்சம் செயற்பட்டதாக விராட் கோலி தமது ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், இருபதுக்கு இருபது அணியில் துடுப்பாட்ட வீரராக தாம் தொடரவுள்ளதாகவும் விராட் கோலி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 6 வருடங்களாக மூன்று வகையான போட்டிகளிலும் அணிக்கு தலைமை தாங்கி வருவதாகவும், தற்போது இடைவௌி தேவை என தாம் கருதுவதாகவும் கோலி கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் மற்றும் இந்திய அணிக்கான தமது சேவையை தம்மால் முடிந்தளவு தொடரவுள்ளதாகவும் விராட் கோலி மேலும் குறிப்பிட்டுள்ளார்.