இராஜாங்க அமைச்சர் வியோழேந்திரனின் வீட்டின் முன்னால் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் படுகாயமடைந்தவர் உயிரிழந்துள்ளார்.
காவற்துறை மெய்பாதுகாவலர் ஒருவரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இதில் படுகாயமடைந்த நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் உயிரிழந்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் வீட்டின் முன்பாக வைத்து, ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
அதில் காயமடைந்த இளைஞன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியில், மென்டர்சன் வீதியிலேயே இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் வீடு உள்ளது.
அவ்வீட்டுக்கு முன்பாகவே இன்று (21) மாலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது என காவற்துறையினர் தெரிவித்தனர்.
இராஜாங்க அமைச்சரின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட வேளையிலேயே அங்கு பாதுகாப்பு கடமையிலிருந்த அமைச்சரவை பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்தவர், துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார் என ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
துப்பாக்கிப் பிரயோகத்தை நடத்திய அந்த அதிகாரி, காவற்துறையில் சரணடைந்துள்ளார்.