வியக்க வைக்கும் விடாமுயற்சி! கீழே விழுந்த பிறகும் தங்கம் வென்று வரலாறு படைத்த பிரித்தானிய வீரர்
பிரேசிலில் நடந்து வரும் ரியோ ஒலிம்பிக் போட்டியில் 10 ஆயிரம் மீற்றர் மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்ட பிரித்தானிய வீரர் மொகமது பராக் விடா முயற்சிக்கு ஓர் எடுத்துக்காட்டாய் விளங்கியுள்ளார்.
ரியோவில் ஒலிம்பிக் தொடரில் இன்று ஆண்களுக்கான 10 ஆயிரம் மீற்றர் மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.
இதில் பிரித்தானிய நாட்டின் சார்பில் மொகமது பராக் கலந்து கொண்டார். வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த பராக், 10 ஆயிரம் மீற்றர் இலக்கை நெருங்கும் போது நிலைதடுமாறி கீழே விழுந்தார்.
இதனால் மற்ற வீரர்கள் அனைவரும் அவரைத் தாண்டி வேகமாக சென்று கொண்டிருந்தனர்.இருப்பினும் போராட்டத்தை எளிதில் விட்டுக் கொடுக்காத பராக் விடாமுயற்சியால் எழுந்து மீண்டும் வேகமாக ஓடி முதல் இடம் பிடித்து தங்க பதக்கம் வென்றார்.
கீழே விழுந்த பிறகும் தனது முயற்சியால் வெற்றி பெற்ற பராக் தனது நாட்டிற்காக வரலாற்று சாதனையைப் படைத்தார். இதற்கு முன் தடகளத்தில் பிரித்தானிய வீரர்கள் மூன்று தங்க பதக்கம் வென்றது கிடையாது.
தற்போது முதன்முறையாக பராக் மூன்று தங்க பதக்கங்கள் வென்று வரலாற்று சாதனைப் படைத்துள்ளார்.
கடந்த 2012ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் 5 ஆயிரம் மற்றும் 10 ஆயிரம் மீற்றர் மாரத்தான் போட்டியில் தங்கம் வென்றிருந்தார்.