விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் அண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ரோஜர் பெடரர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் சுவிட்சர்லாந்து வீரரான ரோஜர் பெடரர், குரோஷியாவின் மரியன் சிலிச்சுடன் மோதினார். இப்போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய பெடரர், 6-3, 6-1, 6-4 என்ற நேர்செட்களில் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் அவர் பெறும் 8-வது சாம்பியன் பட்டமாகும் இது. மேலும் 35 வயதான பெடரர், விம்பிள்டன் பட்டத்தை மிக அதிக வயதில் வென்ற வீரர் என்ற சாதனையையும் படைத் துள்ளார்.
இந்த விம்பிள்டனில் ஒரு செட்டைக்கூட இழக்காமல் ரோஜர் பெடரர் பட்டம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.