விமான விபத்து என்ற அச்சத்தை ஏற்படுத்திய விண்கற்கள் பொழிவு !
கனடா-ரொறொன்ரோ பொலிஸ் மற்றும் தீயணைப்பு பிரிவு செவ்வாய்கிழமை இரவு ரொறொன்ரோ துறைமுகத்தில் விமானம் ஒன்று மோதுகின்றதென தெரிவித்து ஒன்றிற்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புக்களை பெற்றுள்ளனர்.ஆனால் அதிஷ்ட வசமாக அப்படி எதுவும் இல்லை. இரவு வானில் தோன்றிய ஒரு விண்கல்லாகும்.
இத்தடுமாற்றம் செவ்வாய்கிழமை இரவு11மணியளவில் ஆரம்பித்தது. விமான மோதல் என்ற அறிக்கை ருவிட்டரில் சுற்றவிடப்பட்டது.
ஆனால் இச்சம்பவம் விண்கற்களின் ஒரு பகுதியென உறுதிப்படுத்தப்பட்டது.