சென்னை, திருச்சி விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்த இளைஞரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து விசாரணை செய்து வந்த போலீசார், போன் திருச்சி பகுதியில் இருந்து வந்ததை அறிந்து, எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக திருச்சி அருகே உள்ள லால்குடி பூவாளூர் பகுதியில் வெடிகுண்டு மிரட்டல விடுத்த இளைஞரை கைது செய்துள்ளனர். அவரிடம் மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.நேற்று இரவு போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலை பேசி அழைப்பில், சென்னை, மதுரை, திருச்சி விமான நிலையங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது சிறிது நேரத்தில் வெடித்து சிதறும் என்று கூறி உடடினயாக இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இதுகுறித்து அனைத்து விமான நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு, செக்யூரிட்டி பலப்படுத்தப்பட்டது. மேலும், விமான நிலைய வளாகம் முழுவதும் பாதுகாப்பு படையினர், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய் மூலம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
இன்று அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை சோதனை நடைபெற்றது. சோதனையின்போது வெடிகுண்டு என வந்த மிரட்டல் புரளி என கூறப்பட்டது.
அதே வேளையில், தொலைபேசி மூலம் மிரட்டல் விடுத்த தொலைபேசி எண்ணை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் மேற்கொண்ட நடவடிக்கையில், போன் கால், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள பூவாளூரை பகுதியில் இருந்து வந்தது தெரிய வந்தது.அந்த இடத்திற்கு சென்ற திருச்சி போலீசார், போனில் மிரட்டல் விடுத்த சுப்பிரமணி என்பவரை அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.