ஸ்ரீலங்கன் விமான சேவை மற்றும் மிஹின் லங்கா விமான சேவையில் இடம்பெற்ற மோசடிகள் தொடர்பில் பொறுப்புக் கூறவேண்டியவர்கள் தொடர்பில் உரிய தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவை லங்காபுர பிரதேச சபைக்குப் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பொலன்னறுவை, தம்பாளை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதுதொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள “புதிய ஜனாதிபதி ஆணைக்குழு”வினால் உரிய முறையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு குற்றங்கள் நிரூபிக்கப்படுகின்ற அனைவருக்கும் பாரபட்சமின்றி தண்டனைகள் பெற்றுக்கொடுக்கப்படும் என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.