விபத்தில் தனது காலை இழந்த சிறுவனின் கனவு பயணம்!.
கனடா-அல்பேர்ட்டாவை சேர்ந்த எட்டு வயது சிறுவன் றோன் ஹெக்கின் பிடித்தமான பேஸ்போல் அணி ரொறொன்ரோ புளு ஜேய்ஸ்.ரொறொன்ரோவில் இந்த அணியின் விளையாட்டை முதல் தடவையாக கண்டு களிக்கும் சந்தர்ப்பம் புதன்கிழமை இச்சிறுவனுக்கு கிடைத்துள்ளது.
கடந்த கோடையில் இவனது குடும்பம் சியாட்டல் மரினெசுடனான ரொறொன்ரோ புளு ஜேய்சின் விளையாட்டை பார்க்க சென்றனர்.அங்கு றோன் ஒவ்வொரு ஜேய்ஸ் அணியினரிடமிருந்தும் கையெழுத்தை பெற்றான்.
இவன் ஒரு வயதாக இருக்கையில் தனது வலது காலை புல் அறு கருவி விபத்தில் இழந்தான். கடந்த வருடம் புதிய செயற்கை கால் பொருத்துவதற்காக குடும்பத்துடன் சியாட்டல் சென்ற சமயம் புளு ஜேய்ஸ் அணியின் டிசைன்கள் நிறைந்த தனிப்பட வடிவமைக்கப்பட்ட செயற்கை காலில் பந்து வீச்சாளர் Edwin Encarnacion கையொப்பத்துடன் பெற்று கொண்டான்.
கையொப்பமிட்டதுடன் Encarnacion நின்றுவிடாது செயற்கைகாலை கிளப்ஹவுசிற்கு எடுத்து சென்று முழு அணியினரையும் கையொப்பமிட செய்தார்.
முன்னாள் ஜேய்சன் மூன்றாவது தடுப்பு வீரர் கெலி குருபர் சிறுவனின் குடும்பத்தினர் ரொறொன்ரோ வந்து புதன்கிழமை விளையாட்டை பார்ப்பதற்கு பரிசளித்தார்.
இது வரை தனக்கு கிடைக்காத அருமையான சம்பவம் இதுவென றோன் உற்சாகத்துடன் தெரிவித்தான்.