தலைக்கு மேலாக பறந்த விமானத்திலிருந்து கடும் விசையுடன் வெளிப்பட்ட காற்றால் தூக்கி வீசப்பட்டு தலையில் காயத்துக்குள்ளாகி பெண்ணொருவர் உயிரிழந்த விபரீத சம்பவம் நியூஸிலாந்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
கரிபியன் பிராந்திய தீவான சின்ட் மார்ரின் கடற்கரையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்தப் பிராந்தியத்திற்கு விஜயம் செய்யும் சுற்றுலா பயணிகள் அபாய எச்சரிக்கையையும் மீறி அங்குள்ள பாறைகள் மீது ஏறி விமானங்கள் மிகவும் தாழ்வாகப் பறந்து செல்லும் காட்சியை கண்டு களிப்பது வழமையாகும்.
அவ்வாறு விமானம் இறங்கும் காட்சியை மிகவும் துல்லியமாகக் கண்டுகளிக்க தடுப்பு வேலியொன்றின் அருகே நின்ற 57 வயதுப் பெண்ணொருவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். அவர் நியூஸிலாந்துப் பிரஜை ஆவார். இந்நிலையில் அந்தத் தீவுப் பிராந்தியத்தின் சுற்றுலாத் துறைத் தலைவர் ரொலான்டோ பிறிஸன் அந்தப் பெண்ணின் மரணம் குறித்து அதிர்ச்சியை வெளியிட்டுள்ளார்.
தெளிவான அபாய எச்சரிக்கையை அலட்சியம் செய்து மக்கள் தம்மை அபாயத்துக்குள்ளாக்குவது வருந்தத்தக்கது என அவர் கூறினார். அதேசமயம் இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக் கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.