சர்வதேச விண்வெளி நிலையத்தில் 12 நாட்களாக படப்பிடிப்பு வேலைகளை நிறைவு செய்த படப்பிடிப்புக் குழுவினர் கஜகஸ்தானில் தரையிறங்கினார்கள்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) 12 நாட்கள் இருந்த ரஷ்ய நடிகை மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆகியோர் விண்வெளியில் முதல் படப்பிடிப்பை நிறைவுசெய்துவிட்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை பூமிக்குத் திரும்பியதாக ரஷ்யாவின் விண்வெளி நிறுவனமான ரொஸ்கோஸ்மோஸ் (Roscosmos ) தெரிவித்துள்ளது.
ரஷ்யாவில் தயாரிக்கப்படும் த செலன்ஞ் (The Challenge) என்ற படத்தின் படப்பிடிப்பு குழுவே விண்வெளிக்கு படப்பிடிப்பை மேற்கொள்வதற்காக சென்றது.
தயாரிப்பாளர் கிளிம் ஷிபென்கோ (Klim Shipenko)
நடிகை யூலியா பெரெசில்ட் (Yulia Peresild), தயாரிப்பாளர் கிளிம் ஷிபென்கோ (Klim Shipenko) மற்றும் விண்வெளி வீரர் ஒலெக் நோவிட்ஸ்கி (Oleg Novitskiy ) ஆகியோர் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி கஸகஸ்தானில் உள்ள பைகோனூர் காஸ்மோட்ரோமில் இருந்து சோயுஸ் எம்எஸ் -18 (Soyuz MS-18) விண்கலத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றார்கள்.
படப்பிடிப்புக்காக குழுவினருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. குழுவினர் ‘The Challenge’ திரைப்படத்தில் வெவ்வேறு காட்சிகளை படமாக்க 12 நாட்கள் விண்வெளியில் செலவிட்டுள்ளார்கள்.
நடிகை யூலியா பெரெசில்ட் (Yulia Peresild)
இதன் மூலம் விண்வெளியில் படப்பிடிப்பை நடத்தும் உலகின் முதல் நாடாக ரஷ்யா வரலாறு படைத்திருக்கிறது.
விண்வெளி பயணம் குறித்து 37 வயதான நடிகை யூலியா பெரெசில்ட் தெரிவிக்கையில்,
“ ஐ.எஸ்.எஸ்.ஸை விட்டு வெளியேறுவதற்கு வருந்துகிறேன். நான் இன்று சோகமான மனநிலையில் இருக்கிறேன்.
ஏனென்றால், 12 நாட்கள் என்பது மிக நீண்ட காலம் என்று தோன்றியது, ஆனால் அது முடிந்ததும், நான் விடைபெற விரும்பவில்லை,” என ரஷ்ய தொலைக்காட்சி ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
பெரெசில்ட் மற்றும் ஷிபென்கோ மாஸ்கோவின் புறநகரில் உள்ள ரஷ்யாவின் விண்வெளித் திட்டத்தின் இல்லமான ரஷ்ய ஸ்டார் சிட்டிக்கு அனுப்பப்பட்டனர், இது விமானத்திற்கு பிந்தைய மீட்புக்காக ஒரு வாரம் ஆகும் என்று ரோஸ்கோஸ்மோஸ் கூறினார்.
விண்வெளியில் எடுக்கப்பட்ட படம்