தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் புலனாய்வு பிரிவின் முன்னாள் உறுப்பினர்களான சுப்ரமணியம் நகுலன் உள்ளிட்ட 2 பேர் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் இலட்சினையுடன்கூடிய தொப்பியை வானூர்தி அஞ்சல் ஊடாக வெளிநாட்டுக்கு அனுப்ப முயற்சித்ததாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் தொடர்பான வழக்கு இன்று கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த குற்றச்சாட்டிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், சுப்ரமணியம் நகுலன் என்பவர் மற்றுமொரு வழக்கின் அடிப்படையில் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதுடன், ஏனைய இரண்டு சந்தேகத்துக்குரியவர்களையும் பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.