ஹமாசினால் விடுதலை செய்யப்பட்ட 85 வயது பெண் தான் விடுதலையாகும் வேளை ஹமாசை சேர்ந்த ஒருவருடன் கைகுலுக்குவதை காண்பிக்கும் வீடியோக்கள் படங்கள் வெளியாகியுள்ளன.
ஹமாசை சேர்ந்த ஒருவருடன் கைகுலுக்கும் அந்த வயோதிப்பெண்மணி சமாதானம் என தெரிவிக்கின்றார்.
யொச்செவ்ட் லிவ்சிட்ஸ் என்ற வயோதி பெண்ணையும் நுரிட் கூப்பர் என்ற 79 வயது பெண்ணையும் ஹமாஸ் விடுதலை செய்துள்ளது.
எகிப்தின் ரவா எல்லை ஊடாக அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்,பின்னர் அவர்கள் அம்புலன்ஸ்களுக்குள் ஏற்றப்படுவதை எகிப்திய தொலைக்காட்சிகள் காண்பித்துள்ளன.
இதேவேளை இருவரையும் விடுதலை செய்யும் வீடியோவை ஹமாஸ் வெளியிட்டுள்ளது.
அதில் அதிர்ச்சியுடன் ஆனால் பதற்றமற்று காணப்படும் இரு பெண்களிற்கும் ஹமாஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் குளிர்பானங்களை வழங்குவதை காணமுடிகின்றது.
பின்னர் அவர்களை செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைப்பதாக ஹமாஸ் உறுப்பினர்கள் அழைத்து செல்வதையும் காணமுடிகின்றது.
அவ்வேளை அவர்களில் ஒரு பெண் ஹமாஸ் உறுப்பினருடன் கைகுலுக்குகின்றார்.