வரலாற்றில் இன்று. 08. 04. 2002
A9 பாதை திறக்கப்பட்டு யாழ் சென்ற தவிபு போராளிகளை மக்கள் பேரெழுச்சியுடன் ஒன்று திரண்டு வரவேற்பளித்த வரலாற்று சிறப்பு மிக்க நாள்.
போராளிகளை வரவேற்று மக்கள் எழுதியுள்ள வாசகங்களின் பின்னுள்ளது தனி நாடு என்பதற்குமப்பால் ஒரு இனத்தின் பண்பாட்டு மீட்சிகான அவா/ வேட்கை.
இதைத்தான் நாம் பு லி ப் பண்பாடு என்கிறோம். அந்தப் பண்பாட்டை மீட்டெடுக்காமல் இங்கு எதுவுமே சாத்தியமில்லை.
மக்கள் அதை அன்றே புரிந்து வைத்திருந்தார்கள் என்பதற்கான வரலாற்றுச் சாட்சியம்தான் இந்தப் புகைப்படம்.
எதிரி இன அழிப்பு நோக்கில் எம்மைக் கொலை , கொள்ளை, பாலியல் வல்லுறவு, போதைப் பொருள் பாவனை என்று ஒரு குற்ற சமூகமாக மாற்றி விட்டிருக்கிறான்.
பு லி ப் பண்பாடுதான் இதை மாற்றியமைக்கும் – நம்மை இதிலிருந்து மீட்டெடுக்கும்.
மீளவும் மக்கள் எழுதியிருக்கும் வாசகங்களின் இறுதி வரியைப் படித்துப் பாருங்கள்.
அதுதான் எமது வாழ்வு – அரசியல் – வரலாறு.
இதன் ஒட்டு மொத்த வடிவம்தான் பு லி ப் பண்பாடு