தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சந்தேக நபர்களின் ஒப்புதல் வாக்குமூலங்களை ரத்து செய்யுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை இலங்கை அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.
புலிகளின் சந்தேக நபர்கள் பொலிஸாரிடம் அளித்த அனைத்து ஒப்புதல் வாக்குமூலங்களையும் ரத்து செய்யுமாறு கோரியுள்ளனர்.
இதற்காக பயங்கரவாதத்தை ஒழிக்கும் புதிய உத்தேச சட்டத்தில் திருத்தங்களைச் செய்யுமாறு மனித உரிமைப் பேரவை அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
இந்த உத்தேச திருத்தச் சட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக இலங்கைப் பிரதிநிதிகளை ஜெனீவாவிற்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் இரண்டு வார காலப்பகுதியில் ஜெனீவாவிற்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பயங்கரவாத சந்தேக நபர்களின் ஒப்புதல் வாக்குமூலங்களை ரத்து செய்வதன் மூலம் அவர்களை விடுதலை செய்ய ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை முயற்சிப்பதாக கொழும்பு ஊடகமொன்று குற்றம் சுமத்தியுள்ளது.