தமிழர் தம் தார்மீக உரிமையான தமிழீழம் கோரி ஆயுத வழியில், ஓர் பாரிய அரசியல் போராட்டத்தினை முன்னெடுத்த விடுதலைப் புலிகள் அமைப்புக்கு கடந்த 2006 ஆம் ஆண்டு தடை விதித்தது ஐரோப்பிய யூனியன். இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நேற்றைய தினம் தீர்ப்பு வழங்கியது ஐரோப்பிய யூனியன் நீதிமன்றம்.
2009ஆம் ஆண்டிற்கு பிறகு எத்தகைய வன்முறைச் செயல்களிலும் ஈடுபடாத காரணத்தினால், விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்குவதாக உத்தரவிட்டுள்ளது நீதிமன்றம்.
ஐரோப்பிய யூனியனின் இத்தகைய தீர்ப்பினை வரவேற்றுள்ள மதிமுக தலைவர் வைகோ “விடுதலைப் புலிகள் அமைப்பின் மீதான தடையினை ஐரோப்பிய யூனியன் நீக்கியுள்ளது வரவேற்கத்தக்கது. அதேபோல் இந்தியாவும் விடுதலைப் புலிகள் மீதான தடையினை நீக்கிட வேண்டுமென” கூறியுள்ளார்.
விடுதலைப்புலிகள் மீதான தடையினை ஐரோப்பிய யூனியன் நீக்கியதினை தொல். திருமாவளவன், பழ.நெடுமாறன், வேல்முருகன் உள்ளிட்ட ஈழ ஆதரவு தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.