துப்பாக்கி, கத்தி படங்களை தொடர்ந்து விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி மீண்டும் இணைய இருக்கிறது. விஜய்யின் 62வது படமாக உருவாகும் இப்படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாரா, ரகுல் ப்ரீத் சிங் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. படம் பற்றி தினம் ஒரு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
அந்தவகையில் இப்போது இந்தப்படத்தில் ஒளிப்பதிவாளராக மலையாளத்தில் வெளியான சோலோ, அங்கமாலி டைரீஸ் படங்களுக்கு பணியாற்றிய கிரீஷ் கங்காதரனும், எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத்தும் பணியாற்ற உள்ளனர்.
2018, ஜனவரி முதல் படப்பிடிப்பு ஆரம்பமாகிறது. அடுத்தாண்டு தீபாவளிக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.