தமிழில் பிஸியாக நடித்து வரும் விஜய் சேதுபதி, கடந்த ஆண்டு முதல்முறையாக தெலுங்கு மற்றும் மலையாள திரையுலகிலும் அடியெடுத்து வைத்தார். இதில் மலையாளத்தில் அவர் நடிகர் ஜெயராமுடன் இணைந்து நடித்த மார்க்கோனி மத்தாய் என்கிற படம் பெரிய அளவில் வரவேற்பு பெறாமலேயே போனது. இந்நிலையில் மீண்டும் ஒரு மலையாள படத்தில் நடிக்க உள்ளார் விஜய்சேதுபதி.
இந்தப்படத்தை ஆர்.ஜே.ஷான் என்பவர் இயக்குகிறார்.. இவர் ஏற்கனவே மஞ்சு வாரியர் நடித்த C/o சாய்ராபானு என்கிற படத்தின் கதாசிரியர்களில் ஒருவராக பணியாற்றியவர். இந்த ஆண்டு இந்தப்படம் துவங்குகிறது என்கிற தகவலை விஜய் சேதுபதியும் தானும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளார் ஆர்.ஜே.ஷான்..
மேலும் இந்த படத்தில் இன்னொரு கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் பிஜூ மேனன். இப்பட்டத்தின் கதானியாக்கியாக மஞ்சு வாரியார் நடிபது தான் இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவராகவும் தன்னை இணைத்துக் கொண்டுள்ளாராம். மலையாளம், தமிழ் என இரு மொழிப் படமாக இது உருவாகும் என சொல்லப்படுகிறது.