விஜய், சூர்யாவை தொடர்ந்து மீண்டும் முன்னணி நடிகருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ்
கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் நம்பர் 1 இடத்தை நோக்கி பயணிக்கின்றார். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த ரெமோ வசூல் வேட்டை நடத்திவிட்டது.
தற்போது இவர் விஜய் ஜோடியாக பைரவா படத்தில் நடிக்க, அடுத்து சூர்யாவிற்கு ஜோடியாக தானா சேர்ந்து கூட்டம் என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் சண்டக்கோழி-2வில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றது.
இப்படத்தை லிங்குசாமி இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.