நீதி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜயதாச ராஜபக்சவை அந்த பதவியில் இருந்து நீக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய பிரதியமைச்சர் ஒருவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது.
குறித்த பிரதியமைச்சர் இரண்டு முறை இவர்களை சந்தித்து இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து ஜனாதிபதியும் பிரதமரும் துரிதமான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று கடும் நடவடிக்கை எடுக்கும் என இரு தலைவர்களிடம் கூறியுள்ளதாக அறியகிடைத்துள்ளது.
நீதியமைச்சின் கீழ் இயங்கும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஊழல் மோசடிகள் தொடர்பான ஆவணங்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படாமல் நீண்டகாலமாக தேங்கி கிடப்பதே அமைச்சர் விஜயதாச ராஜபக்சவை அந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற யோசனை முன்வைப்பதற்கான பிரதான காரணம் எனக் கூறப்படுகிறது.