புத்தாண்டை முன்னிட்டு நடைமுறைப்படுத்தப்படும் விசேட பஸ் சேவை எதிர்வரும் 25 ஆம் திகதி வரையில் முன்னெடுக்கப்படும் என இலங்கை போக்குவரத்துச் சபை அறிவித்துள்ளது.
இ.போ.ச.யின் 5400 பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அதில், அதிவேக பாதையில் 122 பஸ்கள் சேவையில் உள்ளதாக இலங்கை போக்குவரத்துச் சபை தெரிவித்துள்ளது.