அஜீத்தின் விசுவாசம் படத்தில் நடிப்பது குறித்து நிவின் பாலி, ஆரவ் விளக்கம் அளித்துள்ளனர்.
சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் விசுவாசம் படத்தில் நிவின் பாலி முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் இது குறித்து நிவின் பாலி விளக்கம் அளித்துள்ளார்.இது பற்றி அவர் கூறியதாவது, விசுவாசம் படத்தில் நான் நடிப்பதே மீடியோ மூலம் தான் தெரிந்து கொண்டேன். படக்குழு யாரும் என்னை அணுகவில்லை. மலையாளத்தில் மோகன்லால், மம்மூட்டியுடன் நடிக்க ஆசையாக உள்ளது என்றார். விசுவாசம் படத்தில் பிக் பாஸ் புகழ் ஆரவ் நடிப்பதாகவும் செய்திகள் வெளியாகின. விசுவாசம் படத்தில் தான் நடிக்கவில்லை என்றும், அஜீத் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்றும் ஆரவ் தெரிவித்துள்ளார்.