ஆந்திர மாநிலத்தில் வித்தியாசமான உருவங்களில் ஜோடி ஜோடியாக வானத்தில் வெள்ளி இறகுகளுடன் உருவங்கள் பறப்பதால் அங்குள்ளவர்கள் அச்சம் அடைந்து வருவதாக தகவல் பறவியுள்ளது.
இந்த விசித்திரமான சம்பவம் கடந்த ஒருவாரமாக இரவு 8 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை நிகழ்வதாக கூறப்படுகிறது.
நெல்லூர் மாவட்டத்தில் புறநகரில் சந்திரபாபு காலனி, ஒய்.எஸ்.ஆர்.நகர், படார் பள்ளி, சுந்தரய்யா காலனி, டைலர்ஸ் காலனி, கடமானு பல்லி, பவுர்யா காலனி உள்ளிட்ட பல பகுதிகளில் வித்தியாசமான உருவங்கள் ஜோடி ஜோடியாக வானத்தில் பறப்பதாக மக்கள் அச்சத் தெரிவித்துள்ளனர்.
இந்த உருவங்களுக்கு கைகளுக்கு பதில் 2 இறக்கைகள் வெள்ளி போல வெண்மை நிறத்தில் காணப்படுவதாகவும் கால்கள் மனிதர்களுக்கு இருப்பது போல நீளமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த உருவங்கள் பூமியை நோக்கி பறந்து வருவதாகவும் பின்னர் வானத்துக்கு சென்று விடுவதாகவும் அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
சில உருவங்கள் வீட்டு கூரை மீது நின்றபடி கீச்.. கீச்.. என பேசிக் கொள்வதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
அந்த உருவங்கள் கொக்கு அல்லது நாரையாக இருக்கலாம் என்று முதலில் கூறப்பட்டாலும் அது மனித உருவில் இருப்பதால் பேயாக இருக்கலாம் என்றும், தேவதைகளாக இருக்கலாம் என்றும் பொது மக்கள் கருத்து தெரிவிக்கிறார்கள்.
இதே போன்று கடந்த 2014 ஆம் ஆண்டு பிரேசில் நாட்டில் கிரேக்க தேவதைகள் போல் இறக்கையுடன் பறந்த மனித உருவங்கள் சிலவற்றை அந்த நாட்டை சேர்ந்த போவிஸ்டா என்பவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.