சதுர்த்தியையொட்டி தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து கலந்து கொண்டு தெற்குமுக விநாயகருக்கு தேங்காய் மாலை சாத்தி 108 முறை வலம் வந்து வழிபாடு செய்கிறார்கள்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் விலக்கு ஆர்ச் எதிரே உள்ள திசைமாறிய தெற்குமுக விசாலாட்சி விநாயகர் கோவிலில் மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்று வருகிறது. விநாயகருக்கு உகந்த சங்கடஹர சதுர்த்தி விழா, இந்த கோவிலில் 23-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.
விழாவுக்கு கோவில் நிர்வாகியும், பிரபல ஜோதிடருமான கரு.கருப்பையா தலைமை தாங்குகிறார். சதுர்த்தியையொட்டி தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து கலந்து கொண்டு தெற்குமுக விநாயகருக்கு தேங்காய் மாலை சாத்தி 108 முறை வலம் வந்து வழிபாடு செய்கிறார்கள். பொதுவாக விநாயகர் ஆற்றங்கரை, குளத்தங்கரை, மரத்தடியில் தான் காட்சியளிப்பார்.
ஆனால் மடப்புரம் விலக்கு பஸ் நிறுத்தம் ஆர்ச் எதிரில் தெற்கு முகமாக விநாயகர் காட்சி அளிக்கிறார். இங்குள்ள விநாயகரை வழிபட்டால் கடன் தொல்லை, முன்னோர் சாபங்கள் நீங்கி திருமண தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]