புதுச்சேரியில் சொகுசு கார் பதிவு செய்த விவாகரம், அதில் தற்போது சம்பந்தப்பட்டுள்ள மலையாள நட்சத்திரங்களான அமலாபால், பஹத் பாசில் மற்றும் சுரேஷ் கோபி ஆகியோரை விடுவதாக இல்லை. இவர்கள் அனைவருக்கும் விசாரணை அதிகாரிகள் முன்பு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டது.
சமீபத்தில் இந்த வழக்கில் இருந்து கைதாவதை தவிர்க்க முன் ஜாமின் வாங்கியிருந்தார் நடிகரும், எம்.பியுமான சுரேஷ்கோபி. இந்தநிலையில் கிரைம் பிராஞ்ச் அதிகாரிகள் முன்பு விசாரணைக்கு ஆஜரான சுரேஷ்கோபி, தனக்கு புதுச்சேரியில் நிலம் உள்ளதாகவும், தான் தங்குவதற்கென வாடகைகு வீடு இருப்பதால் அங்கே தனது காரை பதிவு செய்ததாகவும் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது.
ஆனால் அதற்கான ஆவணங்கள் எதையும் ஆதாரமாக சமர்ப்பிக்கவில்லை என்று சொல்லபடுகிறது.