லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் நயன்தாரா நடித்த ‘கோலமாவு கோகிலா’ கடந்த வெள்ளிக்கிழமை அதாவது ஆகஸ்ட் 17 அன்று ரிலீஸானது. அனிருத் இசையில் இந்தப் படத்தில், விக்னேஷ் சிவன், அருண்ராஜா காமராஜ், சிவகார்த்திகேயன் மூவரும் பாடல்கள் எழுதியுள்ளார்கள்.
‘கல்யாண வயசு’ பாடலை எழுதிய சிவகார்த்திகேயனுக்கு கவுரவ சம்பளமாக 5 லட்சம் கொடுக்கப்பட்டுள்ளது. விக்னேஷ் சிவனுக்கும் 5 லட்சம் சம்பளம்.
கோலமாவு கோகிலா படத்தின் புரமோஷனுக்காக அனிருத், நயன்தாராவை வைத்து ‘கன் இன் காதல்’ என்ற வீடியோவை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப்பாடலையும் விக்னேஷ் சிவனே எழுதியுள்ளார்.
இந்த புரமோஷன் வீடியோவை எடுக்க லைகாவிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை பெற்றுள்ளார் விக்னேஷ் சிவன். கோலமாவு கோகிலா வெளியாகி இரண்டு நாட்கள் கழித்து இந்த புரொமோஷன் பாடலை யூடியூபில் வெளியிட்டனர். இதனால் படத்துக்கோ தயாரிப்பாளருக்கோ பெரிய அளவில் நன்மை? இல்லை. விக்னேஷ் சிவனுக்கு லாபம் கிடைத்தது தவிர யாதொரு நன்மையும் இல்லை.