விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகில் ஏற்பட்ட நில நடுக்கம் தொடர்பாக விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
விக்டோரியா நீர்த்தேக்கத்திற்கு அருகில் நேற்று மாலை 1.94 ரிக்டர் அளவில் சிறிய அளவிலான நில நடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், இது தொடர்பாக எவ்வித அச்சமும் கொள்ளத்தேவையில்லை என புவிசரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
எவ்வாறிருப்பினும் இந்த நில நடுக்கம் தொடர்பாக விஷேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.