வாள்வெட்டுக் குழுக்களைக் கைது செய்து கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸ் தனிக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அது நேற்றுத் தொடக்கம் செயற்பட ஆரம்பித்துள்ளது.
வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் றொசான் பெர்னாண்டோ இந்தத் தகவலை உதயன் பத்திரிகையிடம் தெரிவித்தார்.
வடக்கில் தற்போது இடம்பெறும் குற்றச் செயல்கள் தொடர்பில் அவரிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
‘‘10 க்கும் மேற்பட்ட பொலிஸாரைக் கொண்டு இந்தப் புதிய குழு உருவாக்கப்பட்டுள்ளது. குடாநாட்டில் வாள்வெட்டு, முகமூடிக் கொள்ளை, அடாவடிகளில் ஈடுபடுவோரை இந்தக் குழு தேடித் தேடிக் கைது செய்யும்’’ என்று அவர் மேலும் தெரிவித்தார்.
அண்மைக் காலமாக யாழ். குடாநாட்டில் மேற்குறித்த குற்றச்செயல் கள் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.