வார்னரை வம்பிழுத்த திசர பெரேராவுக்கு அபராதம்
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இலங்கை அணியின் சகலதுறை வீரரான திசர பெரேராவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டியில் அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் ஆட்டமிழந்த போது திசர பெரேரா அதை கொண்டாடிய விதம் தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்தே ஒழுங்கு விதிமுறையை மீறி நடந்து கொண்டதாக திசர பெரேராவுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஓட்டங்கள் எடுக்காமல் நின்று கொண்டிந்த போது சந்திமால் மீது பந்தை வீசிய அவுஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கிற்கும் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.