நான் வேறு ஒருவரை காதலிக்கிறேன் உடலுறவு மட்டும் வைத்துக் கொள்ளலாமா என்று பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிகர் ரன்பிர் கபூரிடம் கேட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்துக்கும், நடிகர் ரித்திக் ரோஷனுக்கும் இடையே சண்டையாக உள்ளது. கங்கனாவுடன் தான் தொடர்பு வைத்திருக்க இல்லை என்கிறார் ரித்திக்.
மனைவியுடன் இருக்கும்போதே ரித்திக் தன்னுடன் தொடர்பு வைத்ததாக கூறுகிறார் கங்கனா. இந்நிலையில் கங்கனா ரித்திக்கிற்கு எழுதிய இமெயில் விபரம் கசிந்து வெளியாகியுள்ளது. அதில் கங்கனா எழுதியதாக கூறப்பட்டிருப்பதாவது,என் பிளாக்பெர்ரியில் ஆர்கே என்னை அணுகினார். க்வீன் படத்திற்கு முன்பு அவர் என்னை கண்டுகொண்டது இல்லை. சில சமயம் அவரை பார்த்தால் எனக்கு சகோதர பாசம் ஏற்பட்டது.க்வீன் படத்தை பார்த்த பிறகு ஆர்கே என்னை பிளாக்பெர்ரியில் தொடர்பு கொண்டார். நான் ரிவால்வர் படப்பிடிப்புக்காக குவாலியர் சென்றிருந்தேன். அப்போதும் அவர் என்னை அணுகினார்.
நான் குவாலியரில் இருந்தபோது ஆர்கே என்னை அணுகியபோது நான் வேறு ஒருவரை காதலிக்கிறேன், எப்பொழுதும் டென்ஷனாக இருக்கிறேன் என்று அவரிடம் கூறினேன்.(நீங்கள் என் பர்த்டேவுக்கு வந்து நமக்கு இடையே டென்ஷன் அதிகம் இருந்துச்சுல அது தான். அவரிடம் நான் உங்களின் பெயரை தெரிவிக்கவில்லை)
நான் நியூயார்க் நகரில் இருந்தபோது ஆர்கே எனக்கு மெசேஜ் அனுப்பினார். உடலுறவு மட்டும் வைத்துக் கொள்ளலாமா என்று நான் அவரிடம் கேட்டேன். ஏன் காதலிக்கக் கூடாது என்று கேட்டார். நான் வேறு ஒருவரை காதலிக்கிறேன் என்று கூறினேன்.
கங்கனா ரன்பிரிடம் நான் வேறு ஒருவரை காதலிக்கிறேன் உடலுறவு மட்டும் வைத்துக் கொள்ளலாமா என்று கேட்ட விவகாரம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.