உலக வாழ் வாட்ஸ் அப் பயனாளர்களுக்கு பல புதிய அறிவிப்புகளை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இந்த புதுப்பித்தல்களை அடுத்த 24 மணி நேரத்திற்குள் பயனர்கள் பயன்படுத்தலாம் என்றும் அறிவித்துள்ளது.
வாட்ஸ் அப் குழுவில் 512 உறுப்பினர்களை சேர்க்க முடியும்
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள புதுப்பித்தல்களில் ஒரே வாட்ஸ் அப் குழுவில் 512 உறுப்பினர்களை சேர்க்க முடியும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் 2ஜிபி வரையிலான புகைப்படம், காணொளி போன்றவற்றையும் பகிரும் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் 32 பேர் கலந்துரையாடலாம்
இதற்கு முன்பு ஒரே நேரத்தில் வாட்ஸ்-அப் குரல் அழைப்பில் 8 பேர் மட்டுமே இணைய முடியும் என்ற நிலையில் தற்போது ஒரே நேரத்தில் 32 பேர் கலந்துரையாடலாம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த புதுப்பித்தல்களை அடுத்த 24 மணி நேரத்திற்குள் பயனர்கள் பயன்படுத்தலாம் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த அறிவிப்பால் வாட்ஸ்அப் பயன்படுத்தும் பயனர்கள் அனைவரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
