வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியளித்த பிளாக்பெரி
ஸ்மார்ட்போன் உற்பத்தியை நிறுத்த போவதாக அறிவித்துள்ளது பிளாக்பெரி நிறுவனம்.
கனடாவை சேர்ந்த பிளாக்பெரி நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளது.
இதற்கு காரணம் இதன் பாதுகாப்பு உக்தி தான், வாட்ஸ் அப் போன்ற பல நிறுவனங்கள் பயன்படுத்தும் End To End Encryption முறை பல ஆண்டுகளுக்கு முன்னரே பிளாக்பெரி நிறுவனம் பயன்படுத்தியது.
இந்த முறையின் மூலம் செய்திகளை பாதுகாப்பான முறையில் பரிமாற்றம் செய்ய முடியும்.
ஆனால் இதுவே பிற்காலங்களில் தீவிரவாதிகள், நாட்டுக்கு துரோகம் இழைப்பவர்களுக்கு சாதகமாக அமைந்ததால் பலநாடுகள் தடை விதித்தன.
மேலும் புது அம்சங்களுடன் சந்தையில் களமிறங்கும் ஸ்மார்ட்போன்களால் ஈடுகொடுக்க முடியாத காரணத்தினால், தன்னுடைய ஸ்மார்ட்போன் உற்பத்தியை நிறுத்தப் போவதாக பிளாக்பெரி நிறுவனத்தின் சிஇஓ ஜான்சென் அறிவித்துள்ளார்.
இனிமேல் பாதுகாப்பு மென்பொருள் தயாரிப்பில் மட்டுமே ஈடுபட போவதாகவும் அறிவித்துள்ளார்.