பிரான்சின் பிரபல கேளிக்கை பத்திரிகையான சார்லி எப்த்தோவின் ஜெர்மனிய பதிப்பு நிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் இப்பத்திரிகை மிகப்பெரும் வெற்றியும் பல்வேறு சர்ச்சைகளையும் ஏற்படுத்தியதோடு விற்பனையிலும் சாதனை படைத்திருந்தது. இந்நிலையில் கடந்த வருடம் இதே காலப்படுதியில் சார்லி எப்த்தோவின் ஜெர்மனிய பதிப்பையும் வெளியிட்டது. தற்போது வாசகர்கள் பற்றாக்குறையினால் இந்த பதிப்பு நிறுத்தப்பட உள்ளதாக பத்திரிகை அறிவித்துள்ளது. இன்று வியாழக்கிழமை இதன் இறுதி பதிப்பு வெளியாகியுள்ளது. இதன் பின்னர் பத்திரிகை வெளிவராது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பிரசுரமும் 10,000 பிரதிகள் விற்றால் மாத்திரமே இலாபகரமானதாக இருக்கும் என தெரிவித்து, ஆனால் பத்திரிகை அத்தனை பிரதிகளை தொடவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.