ரஸ்யாவின் கூலிப்படையின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஜின் விமானவிபத்தில் உயிரிழந்துள்ளதை மரபணுபரிசோதனைகளின் பின்னர் ரஸ்யா உறுதி செய்துள்ளது.
பத்து உடல்களும் உறுதி செய்யப்பட்டுள்ளள அவைவிமானத்தில் பயணம் செய்தவர்களின் பெயர் விபரங்களோடு ஒத்துப்போகின்றன என விசாரணை குழு தெரிவித்துள்ளது.மூலக்கூறு மரபியல் சோதனைகள் இடம்பெற்றன,அதனடிப்படையில் உயிரிழந்த பத்துபேரினதும் உடல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன என ரஸ்யா தெரிவித்துள்ளது.
விபத்திற்கான காரணங்கள் குறித்த விசாரணைகளை முன்னெடுப்பதாக ரஸ்யா தெரிவித்துள்ளது.