வாக்கு முறையை சீர்த்திருத்த வேண்டும் என்பதில் ஜஸ்ரின் உறுதி
வாக்கு முறைமையை சீர்த்திருத்த வேண்டும் என்பதில் தொடர்ந்தும் உறுதியாக இருப்பதாக கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், முன்னோக்கி சிந்தனை மற்றும் மேம்பாடுகளை எதிர்நோக்கும் ஒரு நாட்டிற்கு இது மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கின்றேன். எனவே நாங்கள் எங்களுடைய தேர்தல் முறையை இவ்வாறே உருவாக்க வேண்டும்.’ என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் தேர்தல் வெற்றியின் பின்னர் வாக்களிப்பு முறையில் முக்கிய சீ{ர்திருத்தம் செய்ய வேண்டும் என்று ஜஸ்ரின் ரூடோ தெரிவித்திருந்தார். எனினும் அதற்காக கணிசமான அளவு ஆதரவே கிடைத்திருந்தது.
எனினும் தற்போதைய நிலவரத்தின் படி லிபரல் அரசின் இந்த முயற்சியில் ஓரளவு திருப்தியிருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ரூடோ தனது உறுப்பாட்டினை வெளிப்படுத்தியுள்ளார்.