வாகனங்களை கொள்வனவு செய்து பண மோசடியில் ஈடுபட்ட நபரொருவர் மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பணம் செலுத்தாமல் நம்பிக்கை மீறல் 03 வழக்குகள் தொடர்பில் நுகேகொடை மாகாண குற்றத்தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையைத் தொடர்ந்து ராகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜனபிரிய மாவத்தை பகுதியில் வைத்து சந்தேக நபர் நேற்று காலை கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் நீர்கொழும்பில் வசிக்கும் ஒருவரிடமிருந்து 450 இலட்சம் ரூபாபெறுமதியான ஜீப் வண்டியையும், அத்துருகிரிய பிரதேசத்தில் வசிப்பவரிடமிருந்து 225 இலட்சம் ரூபா பெறுமதியான கெப் வண்டியையும், ஜா-எல பிரதேசத்தில் வசிப்பவரிடமிருந்து 185 இலட்சம் ரூபா பெறுமதியான காரையும் பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர் 43 வயதான ராகம பிரதேசத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை இன்று கடுவெல நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதுடன், நுகேகொடை மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]