கொட்டாவை நகரில் உள்ள வாகன உதிரிப்பாக களஞ்சியசாலையொன்றில் இன்று பிற்பகல் 3.00 மணியளவில் திடீரென தீ ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீயணைப்புப் பிரிவின் இரு வாகனங்கள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயிணைக் கட்டுப்படுத்த முயற்சி எடுத்துள்ளனர். தற்பொழுது தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
தீ ஏற்படுவதற்கான காரணம் இதுவரை அறியப்படவில்லை. இத்தீயினால் அருகிலுள்ள நிறுவனமொன்றும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பில் கொட்டாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.