வாகனத்துடன் நீரில் மூழ்கடிக்கப்பட்ட சாரதி. தொடரும் தேடுதல் முயற்சி?
கனடா- வியாழக்கிழமை பிற்பகல் வாகனம் ஒன்று பாதுகாப்பு கம்பியுடன் மோதி லேக் ஒன்ராறியோவிற்குள் மூழ்கியது. வாகனத்திற்குள் இருந்த சாரதியை தேடும் முயற்சி தொடர்கின்றது.
வாகனம் செறி வீதி பகுதியில் பிற்பகல் 4-மணியளவில் நடுக்கோட்டை தாண்டி பாலமொன்றின் ஓரநடைபதையை தாண்டி பாலத்தில் ஏறி கடப்புக்களை மோதி தணணீருக்குள் விழுந்துள்ளது.
சைக்கிளில் சென்ற ஒருவர் இதனை கண்டதும் தண்ணீருக்குள் குதித்து அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. உடல் வெப்பகுறைவினால் பாதிக்கப்பட்ட இவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர்பொலிசார் காரை கண்டுபிடித்தனர். ஆனால் சாரதியின் உடலை காண முடியவில்லை. தேடுதல் முயற்சி தொடர்ந்து பொழுது சாயும் தருணமாகையால் மாலை 6.30-மணியளவில் நிறுத்தப்பட்டது.
சம்பவம் நடந்த இடத்தில் தண்ணீரின் ஆழம் 25 முதல் 30 அடிகள் ஆழமானதென பொலிசார் தெரிவித்தனர்.
தேடுதல் முயற்சிக்கு மீட்பு பணியினர் தேவைப்பட்டனர் .உடல் கண்டுபிடிக்கப்படும் வரை காரிற்குள் இருந்தவரின் விபரங்கள் தெரியாது. விபத்திற்கான காரணமும் தெரிய வாய்ப்பில்லை.
மீட்பு முயற்சிகள் வெள்ளிக்கிழமை காலை 8மணிக்கு மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.