வவுனியாவில் உள்ள வர்த்தக நிலையங்களில் நேற்றுத் திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா மாவட்ட அளவைகள், நிறுவைகள், நியமங்கள் அளவீட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில், வவுனியா நகர்ப்பகுதியில் வியாபார நிலையங்களின் அளவு தராசுகள் சோதனை செய்யப்பட்டன.
பதிவு செய்யப்படாத அளவுக் கருவிகளின் பாவனை தொடர்பாகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வவுனியா சந்தை, உள்வட்ட வீதி, கடை வீதி, முதலாம் குறுக்குத்தெரு, இரண்டாம் குறுக்குத்தெரு போன்ற பல பகுதிகளில் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.