வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் வீட்டில் உறங்கியிருந்த பாடசாலை மாணவியை காணவில்லை என அவரது பெற்றோர்கள் வவுனியா பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு செய்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா மகாறம்பைக்குளம், லக்சபான வீதி, முதலாம் ஒழுங்கையில் வசித்து வரும் அன்ரன் அனிஸ்டலா (வயது – 14) என்ற பாடசாலை மாணவி நேற்று முன்தினம் (06.09) அவரது வீட்டில் இரவு உணவு சாப்பிட்டதன் பின்னர் வீட்டின் அறையில் உறங்கியுள்ளார்.
நேற்றைய தினம் அதிகாலை அவரது பெற்றோர் பாடசாலைக்கு செல்வதற்கு எழும்புமாறு அறைக்கு சென்ற போது குறித்த பாடசாலை மாணவியை காணவில்லை என அவரது பெற்றோர் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.