வவுனியா பொலிஸ் நிலையத்தில், விசித்திரமான முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
வெளிநாட்டிலுள்ள உறவினருக்கு தனியார் பொதி அனுப்பும் முகவர் நிலையத்தினூடாக அனுப்பிய பல ஆயிரம் ரூபா பெறுமதியான பொருள்கள் அங்கு சென்று சேரவில்லை என்று தெரிவித்து இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வவுனியாவிலிருந்து வெளிநாட்டிலுள்ள உறவினருக்கு பலகாரப் பொருள்கள், மிளகாய்த்தூள், சரக்குப் பொருள்கள், ஆடைகள் என அங்கு பெற்றுக்கொள்ள முடியாத பொருள்கள் தனியார் பொதி அனுப்பும் முகவர்கள் நிலையத்தால் அனுப்பிவைக்கப்பட்டன. எனினும் அவை அங்கு சென்று சேரவில்லை.
குறித்த பொருள்களுக்கு 7ஆயிரம் ரூபா செலவிட்டு அனுப்பிவைக்கப்பட்டது என்று முறைப்பாட் டாளர் தெரிவித்துள் ளார்.
குறித்த தனியார் பொதி அனுப்பும் முகவர் நிலையத்துக்கு எதிராக இதுவரையில் ஏழு முறைப்பாடு கள் கிடைக்கப்பெற்றுள்ளன என்றும் இது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாண மாவட்டத்திலும் இது போன்ற முகவர் நிலையங்களுக்கு எதிராகவும் முன்னர் இத்தகைய முறைப்பாடுகள் முன்னர் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.