வவுனியா மாவட்ட செயலக கொடி கம்பத்தில் கட்டப்பட்டிருந்த தேசியக் கொடியை கழற்றி வீசி அவமதித்த சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிசாரால் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா மாவட்ட செயலகத்தின் கொடிக் கம்பத்தில் கீழ் இறக்கப்பட்ட நிலையில் கட்டப்பட்டிருந்த தேசியக் கொடியை மாவட்ட செயலகத்திற்கு வந்த நபர் ஒருவர் கழற்றி அதனை கீழே வீசி அவமதித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
தேசியக் கொடி கழற்றி வீசப்பட்டதை அவதானித்த மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் இது தொடர்பில் அரச அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து அங்கு பொருந்த பட்ட சீசீடிவி கமராவை பரிசோதித்த போது தேசியக் கொடியை நபரொருவர் அவமதித்தமை பதிவாகியிருந்தது.
இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பில் வவுனியா மாவட்ட செயலாளர் எம்.பி.ரோஹண புஸ்பகுமார வவுனியா பொலிசில் செய்த முறைப்பாட்டை தொடர்ந்து விசாரணைகளை ஆரம்பித்த வவுனியா பொலிசார் வவுனியாஇ பண்டாரிக்குளம் பகுதியைச் சேர்ந்த நபரொருவரை கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் மோட்டர் கார் ஒன்றில் மாவட்ட செயலகத்திற்கு வருகை தந்து குறித்த செயலை செய்துள்ளதாகவும்இ ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இது தொடர்பான விசாரணைகளை பொலிசார் தொடர்ந்தும் மேற்கொண்டு வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.