வவுனியா மாவட்டத்தில் இம்மாதம் 11 ஆம் திகதி வரை 1651 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 63 பேர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் கொரோனா தொற்று வீதம் நாளாந்தம் அதிகரித்து செல்கின்றது. குறிப்பாக செப்டம்பர் மாதம் முதலாம் திகதியில் இருந்து 11 ஆம் திகதி வரை 1651 பேர் கோவிட் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளதுடன், 63 பேர் கொரோனா தொற்றினால் மரணமடைந்துள்ளனர்.
நாட்டில் ஏற்படும் மரண வீதத்தில் வவுனியாவில் மரணிப்போரின் தொகை பாரியளவில் காணப்படுகின்றது.
வவுனியாவில் மக்களின் அசமந்தமான செயற்பாட்டால் மரண தொகை கட்டுக்கடங்காமல் செல்கின்றது. எனினும் மக்கள் இதன் பாரதூரமான தன்மையை உணரவில்லை. இது பாரிய ஆபத்தான நிலைப்பாடாக உள்ளது.
ஆகவே வவுனியா மாவட்டத்தின் நிலை தொடர்பில் மக்கள் சிந்தித்து சுகாதார நடைமுறைகளை இறுகப் பின்பற்றி செயற்பட வேண்டும் என சுகாதார பிரிவினர் மேலும் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் 3328 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 50 பேர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.