மொசாம்பிக் நாட்டில் வழுக்கை தலையாக இருக்கும் 3 ஆண்களின் தலையில் இருந்து தங்கம் எடுக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் கொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வழுக்கை தலையாக இருக்கும் ஆண்களின் தலையில் தங்கம் இருக்கும் என்ற மூட நம்பிக்கை மொசாம்பிக் நாட்டில் நிலவி வருகிறது.
அதிலும் குறிப்பாக மிலாங்கே மாவட்டத்தில் தான் தங்கம் எடுப்பதற்காக வழுக்கை தலை ஆண்களும் கொலை செய்யப்படுகின்றனர்.
இதனால், வழுக்கை தலை ஆண்கள் விழிப்புடன் இருக்குமாறு பொலிசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வாடிக்கையாளர்களை திருப்திபடுத்துவதற்காகவும், அவர்களிடம் உள்ள செல்வத்தை அதிகரிப்பதற்காகவும் மேற்கொள்ளப்படும் சடங்குகளில், கொலை செய்யப்பட்ட ஆண்களின் உடல் பாகங்கள் பயன்படுத்தப்பட்டதாக பொலிசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.