வழிபாட்டுத் தலத்தில் கொடூர தாக்குதல்: 14 பேர் பலி, 26 பேர் படுகாயம்
ஆப்கானில் உள்ள Karte Sakhi மசூதியில் சிறப்பு வழிபாடு ஏற்பாடுகள் மிக சிறப்பாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில் வெடிகுண்டு சத்தம் மற்றும் துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதாக பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அப்போது மர்ம நபர் ஒருவர் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் மீது எந்திர துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதாக கூறப்படுகிறது. இதில் சம்பவயிடத்திலேயே 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 26 பேர் படுகயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் உள்ளிட்ட பாதுகாப்பு படையினர் குறிப்பிட்ட மசூதியில் கூடியிருந்த மக்களை அங்கிருந்த கலைந்து செல்லும்படி கேட்டுக்கொண்டனர்.
பொலிஸ் தரப்பு தகவலின்படி தாக்குதலை நடத்தியவர்கள் ஒருவருக்கும் மேல் இருக்கலாம் எனவும், அவர்கள் பொலிஸ் அல்லது ராணுவ உடையில் வந்து தாக்குதலை முன்னெடுத்திருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.
குறித்த நாளில் தாக்குதல் நடத்தப்படலாம் என பொலிஸார் ஏற்கனவே எச்சரித்திருந்ததாக கூறப்படுகிறது.
கடந்த யூலை மாதம் ஐ.எஸ் ஆதரவு குழுவினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 80 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.