இலங்கைக்கு அழுத்தத்தை ஏற்படுத்திய தாழமுக்க தாழ்வு நிலையானது, 1500 கிலோ மீற்றருக்கு அப்பால் வங்காள விரிகுடா கடல் பகுதியில் இருப்பதோடு, இது வலுவிழந்து வருவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் அனுஷா வர்ணசூரிய தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 5ம் 6ம் திகதிகளில் இந்த தாழமுக்க நிலை வங்காள விரிகுடாவின் மத்திய பகுதிக்கு நகர்வதோடு, எதிர்வரும் 8ம், 9ம் திகதிகளில் இந்தியாவை நோக்கி நகரும் என்றும் அவர் கூறினார்.
இதனால் இலங்கைக்கு பாரிய அளவிலான பாதிப்பு ஏற்படாது.
இது தொடர்பான தகவல்களை வழங்குவதற்கு வளிமண்டலவியல் திணைக்களம் அவதானத்துடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இருப்பினும், பருவப்பெயர்ச்சி காலநிலை காரணமாக மாலை வேளையில் மழை பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் அனுஷா வர்ணசூரிய அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.