வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கோரிய முள்ளிவாய்க்கால் நோக்கிய பயணம் இன்று கிளிநொச்சியில் ஆரம்பமானது.

வடக்கில் ஆரம்பிக்கப்பட்ட பயணம் நேற்று மாலை கிளிநொச்சியை வந்தடைந்தது. இதையடுத்து இன்று காலை 9 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட பயணத்தின் ஆரம்ப நிகழ்வு பரந்தன் சந்தியில் இடம்பெற்றது.

முள்ளிவாய்க்கால் நினைவாக கஞ்சி வழங்களுடன் ஆரம்பமான பயணத்தில் “வடக்கும், கிழக்கும் தமிழர் தாயகம் ” மற்றும் உறவுகளுக்கு நீதி கோரியும் தமது இன்றைய பயணத்தை ஆரம்பித்தனர்.
பூநகரி ஊடாக வெள்ளாங்குளம் சென்று மல்லாவி ஊடாக குறித்த பயணம் மாங்குளத்தை இன்று மதியம் அடையவுள்ளது.

தொடர்ந்து கிழக்கில் இருந்து பயணிக்கும் குழுவினருடன் இணைந்து மீண்டும் முறிகண்டி, கிளிநொச்சி, பரந்தன் ஊடாக முல்லைத்தீவு சென்று முள்ளிவாய்க்காலை சென்றடைய உள்ளமை குறிப்பிடத்தக்கது.