சென்னை: அடுத்து வரும் 2 ஆண்டுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
14 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின், தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை, புதிய திட்டங்கள் குறித்து கலெக்டர்களுடன் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. 3 நாட்கள் இந்த கூட்டம் நடக்கும்.
முதல் நாளான இன்று( ஜூன் 11) சென்னை, காங்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை உள்ளிட்ட 14 மாவட்ட கலெக்டர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டம் முடிந்த பிறகு தலைமைச்செயலாளர் சிவதாஸ் மீனா உடன் அவர்கள் ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.
காலை உணவுத் திட்டம்
ஆலோசனைக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: அடுத்து வரும் 2 ஆண்டுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. தமிழ் புதல்வன் திட்டம் விரைவில் துவங்கப்படும். அனைத்து திட்டங்களும் மக்களை சேர்ந்துள்ளது. இன்னும் பல திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. காலை உணவுத்திட்டம் ஊரகப்பகுதியில் உள்ள அரசு உதவிப்பெறும் பள்ளிகளுக்கும் அறிமுகப்படுத்தப்படும். அரசு திட்டங்களை செயல்படுத்துவதில் தொய்வு ஏதும் ஏற்படக்கூடாது. இவ்வாறு அவர் கூறினார்.