திய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் ஒன்றை தயாரிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
குறித்த சட்டமூலத்தை தயாரிப்பதற்காக சட்ட நிபுணர் ரின்சி அல்சகுலரத்ன தலைமையிலான குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த விடயத்தை இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது அமைச்சர் விஜித ஹேரத் (Vijitha Herath) வெளியிட்டுள்ளார்.
15 அமைப்புகளுக்கு தடை
இதேவேளை, பயங்கரவாதத்துடன் தொடர்புப்பட்ட செயற்பாடுகள் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியளித்த குற்றச்சாட்டில் 15 அமைப்புகளை தடை செய்யப்பட்ட அமைப்புகளாக அரசாங்கம் இன்று (22) அறிவித்திருந்தது.

இந்த நிலையில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் சம்பத் துய்யகொன்தாவினால் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.