தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் நிறுவனங்களில் வரி ஏய்ப்பு செய்தது உண்மைதான் என அவரின் மனைவி ஒப்புக்கொண்டுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் அமைச்சர் விஜயகுமார், நடிகர் சரத்குமார் உட்பட பலரது வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.
விஜயபாஸ்கரின் வீட்டிலிருந்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.
மேலும் புதுக்கோட்டை மற்றும் திருச்சியில் செயல்படும் மணல் குவாரிகள், கல்வி நிறுவனங்கள், அவரது சொத்துக்கள் ஆகியவை குறித்தும் சோதனை நடத்தப்பட்டது.
இதுதொடர்பாக விஜயபாஸ்கரின் தந்தை மற்றும் மனைவியிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
விசாரணையில் இருவரும் பல கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு செய்ததை ஒப்புக்கொண்டுள்ளனர்.
இதன்மூலம் ரூ.21 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்தது உறுதியாகியுள்ளதால் விசாரணை சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளது.